Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சத்தால் நியூசிலாந்தில் தேர்தல் ஒத்திவைப்பு ….!!

கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை நியூசிலாந்து அரசு தள்ளிவைப்பதாக அறிவித்துருக்கிறது.

நியூசிலாந்தில் 102 நாட்களாக கொரோனா தொற்று ஒன்று கூட பதிவாகாத நிலையில் ஆக்லாந்து நகரத்தில் 49 பேருக்கு நேற்று வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் பொதுமுடக்கம் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் தலைகாட்டி இருப்பதால் நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை 4 வாரங்களுக்கு அதாவது அக்டோபர் 17-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக பிரதமர் ஜெசிந்தாஹதன் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |