Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்….. குடும்பமே தற்கொலை முயற்சி…. 2 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கல்மேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |