கொரோனா முன்னெச்சரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்பொழுதும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக குறைந்த அளவிலேயே மக்கள் பயணிக்கிறார்கள்.
இன்று மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்ற நிலையிலும், மக்கள் பேருந்துகளில் குறைவாகவே பயணிக்கின்றனர். நெல்லை மாநகரத்தை பொருத்தவரை சுமார் 300 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தற்போது வரைக்கும் பேருந்துகள் இயக்கம் என்பது குறைவில்லாமல் இருக்கிறது. ஆனால் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக அதிகம் வெளியில் வராமல் இருக்கிறார்கள். இருந்தும் பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லாமல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.