Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தம்… வெளியான தகவல்..!!

கொரோனா அச்சம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாசிக் நகரில் உள்ள நாணய பாதுகாப்பு அச்சகம் மற்றும் இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது ஏப்ரல் 30ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டுள்ளது இரு நிறுவனங்களிலும் பணியாற்றும் 3,000 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |