Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலில் வெளியான நீட் தேர்வு ஹால்டிக்கெட் …!!!

நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் நீட் தேர்வை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் உருவாகியது.

இந்நிலையில் தேர்வு எழுதுவதற்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் கொரோனா வின் தாக்கம் சற்று குறைந்துவிடும், அதன்பிறகு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என மத்திய தேர்வு முகமை கருதி இருந்தது.

ஆனால் அவர்களின் கருத்துக்கு மாறாக, தற்போது தான் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. டிசம்பர் மாதம் வரையில் இந்த நிலை தொடரும் என்பதால், எப்பாடுபட்டாவது தேர்வை நடத்திவிட வேண்டும் என முடிவு செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்களை பெற்று இருந்த மத்திய தேர்வு முகமை ஹால் டிக்கெட்டை இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வமாக இணையதளம் மூலமாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. மேலும் நீட் தேர்வு 3,843 மையங்களில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா ஆகிய மாநில முதல்வர்கள் அனைவரும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |