நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், புனித தளங்களுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாக அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த வருடமும் கொரோனா காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்திற்கு எளிமையான முறையில் சடங்குகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.