கொரோனா வைரஸால் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து யூனியன் பிரதேசங்கள் உட்பட நாட்டில் 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.