Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வர தடை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 125பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 103 பேர் இந்தியர்கள், 22 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.

இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்ற்றனர். இந்த நிலையில் மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Categories

Tech |