சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவும் கொரோனா வைரஸ் 200 நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ள நிலையில் 391பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இ
ந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொரோனா நோயினால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 868ஆக உயர்ந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லம் அருகே டீ வியாபாரிக்கு கொரோனா உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.