Categories
உலக செய்திகள்

கொரோனா அட்டகாசம்…. ”15 நாடுகள் பாதிப்பு”….. பீதியில் கதறும் உலக நாடுகள்

சீனாவை தொடர்ந்து மேலும் 15 நாடுகளை  கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இதுவரையில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7736 பேர்  இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி உச்சத்தை  அடைவது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துள்ளது.

சீனாவை தொடர்ந்து மேலும் 15 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது உலக அரங்கை பீதி அடையவைத்துள்ளது. அதில் தாய்லாந்து-14  சிங்கப்பூர்-10 ஜப்பான்-8 ஹாங் காங்–8 தைவான்-8  மலேஷியா-7 ஆஸ்திரேலியா-7 மக்காவு-7 UAE -4 USA – 5  சவுத் கொரியா-4 பிரான்ஸ்-4 ஜெர்மனி- 4  கனடா- 2 நேபால்-1 என்ற எண்ணிக்கையில் பரவி உள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |