தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவுநேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொரோனா உச்சத்தில் இருக்கும் என்பதால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜனவரி 31க்கு பிறகு இரவு நேர ஊரடங்கை நீட்டிக்கவும், கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.