இலங்கை உட்பட 7 நாடுகள் ஜெர்மனியின் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ஜெர்மன் சுகாதார அமைச்சகத்தின் துணை நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் புதிதாக ஏழு நாடுகளை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜர்பைஜான், அல்பேனியா, பாலஸ்தீனிய பிரதேசங்கள், குவாத்தமாலா, ஜப்பான், இலங்கை, செர்பியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்த்து ஜெர்மனியின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கு பொறுப்பான RKI பட்டியல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பட்டியலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்று தாய்லாந்து, கிரேக்கத் தீவுகளான க்ரீட் மற்றும் டினோஸ், மொரோக்கோ, மாண்டினீக்ரோ, வட மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து ஜெர்மனி நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அனைவருக்கும் செப்டம்பர் 5 முதல் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொரோனா பரிசோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்கள் ஆகியவற்றை ஜெர்மனிக்குள் நுழைந்தவுடன் கட்டாயம் வழங்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் ஜெர்மனி நாட்டிற்கு பயணிப்பதற்கு முன் einreiseanmeldung.de எனும் தளத்தில் பதிவு செய்ததற்கான ஆதாரத்தையும் உடன் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.