நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இதையடுத்து தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பள்ளி, கல்லூரிகளில் நடத்துபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாஸ்க் போட மக்கள் மறந்து விட்டதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.