கொரோனா அதிகரிப்பு காரணமாக ராஜஸ்தான் உள்ளிட்ட 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில மாவட்டங்களில் அதிகமாகப் பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அஜ்மீர், பில்வாரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் இரவு 11 மணி அளவில் முதல் 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்தை இரவு 10 மணிக்கு மேல் மூடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தவிர ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் வெளிமாநிலத்தவர்கள் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அம்மாநில அரசு சான்றிதழ் இல்லாதவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது.