Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் உச்ச கட்டம்…. அவதிப்படும் குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக இருந்து வருகிறார்.  தங்கவேலுக்கு ஒரு வாரமாக  காய்ச்சல், சளி இருந்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து வேட்பாளர் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது அவர்களுக்கும் தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டிலேயே தனிமை படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |