Categories
மாநில செய்திகள்

கொரோனா அபராத வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்டது. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொதுஇடங்களில் முக கவசம் அணியாதது, தனிமனித இடைவெளியை பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புவது, முடி திருத்தம், ஸ்பா, ஜிம் ஆகியவை விதிமுறைகளை பின்பற்றாதது என்று, 200 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ராமநாதபுரத்தை சேர்ந்த 77 வயதான ஆர். முத்து கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஷாகி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

“அரசு தரப்பில் இருந்து கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து ஏற்கனவே பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்று தலைமை நீதிபதி அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Categories

Tech |