தஞ்சாவூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாத 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நோய்க்கான தாக்கம் இல்லாத பட்சத்தில் அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளனர். இதனிடையே நோய் தொற்று பரவ காரணமாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுவை சேர்ந்த முத்துகண்ணு, வெள்ளைச்சாமி, சிவக்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதே போல் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 3 பேர் மீதும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.