சென்னையில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டு மண்டலங்களில் கொரோனா தோற்று அதிகரித்திருப்பதாக மாநகராட்சி புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 10 நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிகை 1300-யை கடந்து பதிவாகி வருகிறது. சென்னையில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா தாக்கம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மண்டல வாரியாக கடந்த ஒரு வாரத்தில் எட்டு மண்டலங்களில் கொரோனா தோற்று அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 2.9% அதிகரித்துள்ளது.
பெருங்குடி 2.1%, திருவெற்றியூர் 1.3 %, திருவிகநகர் 1.1 %, ராயபுரம் 0.7%, தேனாம்பேட்டை 0.5%, அம்பத்தூர் 0.2%, மணலி 0.1% நோய் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அம்பத்தூர், அடையாறு, மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.