நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், மண்ணிலே அரசுகளும் க்கொறோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் மெதுவாக நடந்து வரும் தடுப்பூசி பரிசோதனையை வேகப்படுத்தவில்லை.
தடுப்பூசி பற்றாக்குறையே இதற்கு காரணம் என மத்திய அரசை விமர்சித்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்திருந்த மத்திய அரசின் கொரோனா ஆய்வு குழு மற்றும் ஆலோசனைக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் திடீரென விலகியுள்ளார். இவர் இரட்டை உருமாற்றம் வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.