Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஆராய்ச்சிக்கு…. உடல் தானம் செய்த முதல் பெண்….!!!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 93 வயதான ஜோத்ஸ்னா போஸ் என்ற பெண்மணி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு, கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த பின் தன் உடலை கொரோனா ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா ஆராய்ச்சிக்காக உடலை தானம் செய்த பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரின் பேத்தி டிஸ்தா பாசு, ஒரு மருத்துவர்.

இதுபற்றி அவர் கூறுகையில், “நான் நோய் இயல் துறையில் முதுகலைப் படிக்கிறேன். கொரோனா முற்றிலுமாக ஒரு புதிய நோய் என்பதால், எங்களைப் போன்ற பலருக்கும் இதன் தன்மை பற்றி விரிவாக தெரியாது. இது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள, இதுபற்றி நாங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு புரிதல் வரும். அந்த ஆய்வுக்கு நோயியல் பிரேத பரிசோதனை எங்களுக்கு உதவும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |