Categories
தேசிய செய்திகள்

கொரோனா: இனி மோசமான பாதிப்பு இருக்காது…. கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள்….!!!!

கொரோனாவால் இனிமேல் மோசமான பாதிப்புகள் இருக்காது என பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதேசமயம் 2 வருடங்களுக்கும்  மேலாக உலகின் ஒவ்வொரு மூலையையும், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்த ஒரு பெருந் தொற்றுநோய் கொரோனாவாகத்தான் இருக்க முடியும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். பேரிடா் முடிவுக்கு வந்த விட்டது என்ற போதிலும், கொரோனா இங்கே தொடா்ந்து இருந்துகொண்டு தான் இருக்கும்.

இந்தியா உட்பட உலகின்  பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையானது பன் மடங்காக உயராத நிலையிலும், வெகுவாக குறையாத அளவிலும் ஒரு நிலையான பின்னணியில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

 

Categories

Tech |