நாடு முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து தற்போது நாட்டில் கொரோனா இன்னும் முடியவில்லை என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுபற்றி பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய மாநில அரசுகள் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.