கொரோனா பாதிப்பின் இரண்டாவது அதை சமாளிப்பதற்கு ஸ்பெயினில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.
ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் விமான நிலையத்திற்கு அருகே ஒரு புதிய தொற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கு பல்வேறு பணியாளர்களுடன் இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனை நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் ஸ்பெயினில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இது நாட்டின் பொது சுகாதார அமைப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெஷல் ஜென்டல் மருத்துவமனை 45,000 சதுர மீட்டரில் கட்டுவதற்கு கட்டிடத் தொழிலாளிகள் அனைவரும் ஜூலை மாதம் முதல் இரவு பகலாக வேலை செய்து வருகிறார்கள்.
புதிதாக கட்டப்படும் இந்த மருத்துவமனையில் சுகாதார அவசர கால கட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மாட்ரிட்டின் பிராந்திய அரசாங்கம் மருத்துவமனை கட்டுவதற்கு 50 மில்லியன் யூரோக்களை செலவிட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ மனையில் மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்கும் வகையில், ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய மருத்துவமனை திறப்பதன் மூலம் அங்கு நோய்த்தொற்று அதிகரிப்பதை சமாளிப்பதற்கு மிகவும் தாமதம் ஏற்படும். அந்தச் செய்தி கவலையளிப்பதாக ஸ்பெயின் பிரதமர் கூறியுள்ளார்.