கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மோசமான கனவுகள் காண்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலளவில் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் மனதளவாகவும் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்படுபவர்கள் கனவு காண்பதிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் மனநல நிபுணர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட 2,888 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்பைவிட இப்போது பயங்கரமான கனவுகளை காண்கின்றனர். வேலை இழப்பு, சொந்தங்கள் கைவிடுதல், பணம் இழப்பு போன்ற மிகவும் மோசமான பயங்கரமான கனவுகளை அவர்கள் காண்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் பெண்களுக்கு இது போன்று அதிகமாக கனவுகள் வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.