கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வரும் முன்பு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. வேகமாக பரவி வரும் இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தான் இறுதி பெருந்தொற்றாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் கொரோனாவை தடுக்க அதிகம் செலவிடுகிறோமோ தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளது.