தென்காசி மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும்அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் குறைய தொடங்கின.
தென்காசியில் மட்டும் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8,262 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இப்போது 28 பேர் மட்டும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிப்.8ம் தேதி செய்யப்பட்ட பரிசோதனையில், எந்த ஒரு நபர்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தென்காசி மீண்டு வருவதாக அனைவரும் மகிழ்ந்த நிலையில் நேற்று புதிதாக 6பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.