Categories
மாநில செய்திகள்

“கொரோனா இல்லையென்றாலும் முகக்கவசம் கட்டாயம்”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி அரசு கொரோனா மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பாக இரவு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருப்பு பூஜை நோயால் பாதிக்கப்பட்ட 1094 பேரில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுகூடவிருக்கும் நீட் கமிட்டி, ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை அளிக்கும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்தாலும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |