கொரோனா பாதுகாப்பு உபகரணங்களில் ஊழலில் ஈடுபடுவது கொலை செய்வதற்கு சமம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், ” உலகின் கொடூரமான காலகட்டத்தில், தொற்று நோய்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை கொலை செய்வதற்கு சமம். அதிலும் குறிப்பாக பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையிலேயே கொலை செய்வதற்கு தான் சமம். ஏனென்றால் சுகாதார ஊழியர்கள் அனைவரும் இந்த உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்யும்போது, அது மக்களின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடும்.
அதுமட்டுமன்றி சுகாதார ஊழியர்கள் தங்களின் உயிரை பணயம் செய்கிறார்கள். கொரோனா வைரஸ் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும். கடந்த 1918ம் ஆண்டு தோன்றிய ஸ்பானிஷ் காய்ச்சலை விரட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மூலமாக குறைந்த கால கட்டத்திலேயே கொரோனாவை மிரட்ட முடியும். மக்களின் நெருங்கிய தொடர்புகளால் கொரோனா பாதிப்பு அதிகமாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் அதே சமயத்தில் அதனை தடுக்கும் தொழில்நுட்பம் மற்றும் தகுந்த அறிவும் நம்மிடம் இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார். 1918 ஆம் ஆண்டு தோன்றிய அந்தக் கொடிய காய்ச்சல் 5 கோடி மில்லியன் மக்களின் உயிரை பலி வாங்கியது. தற்போது தோன்றியுள்ள கொரோனா வைரஸ் தற்போது வரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. அதுமட்டுமன்றி கொரோனாவால் 2.27 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.