Categories
உலக செய்திகள்

கொரோனா ஊசி போட்டு என்ன பயன் ? பிறகு ஏன் போடணும்…. பிரபல நாட்டில் மக்கள் போராட்டம் …!!

பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று கூறிய அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று.அந்நாட்டில் மூன்றாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதோடு நான்காவது அலையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அரசு கொரோனா வைரசை  தடுப்பதற்காக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மேலும் உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவுரையின்படி கொரோனா பரவலை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்திகிறார்கள். இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களை வலியுறுத்துகிறார்கள். இதன்படி  அந்நாட்டு அரசு போட்ட கட்டுப்பாடுகளால் நாளை முதல் ஹோட்டல், வணிக வளாகங்கள், பார்கள், பொது போக்குவரத்து மற்றும் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவர்களின் தேவைகளுக்காக பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால்  இந்நாட்டு அரசு தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என சொல்வது மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக அந்நாட்டு மக்கள் கூறுகிறார்கள். அதனால் பிரான்ஸ் நாட்டு மக்கள் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு என்ன பயன். மேலும் தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியது எங்களின் சுதந்திரத்தை பறிப்பதாகும். கட்டுப்பாடுகளை தொடர்ந்தால் மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |