கனட நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி வருகின்றது. இத்தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கனடாவில் 4 தடுப்பூசிகளை கொரோனாவினாவிற்கான தடுப்பூசியாக அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது. இந்த 4 தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகாவினால் ரத்தம் உறைதல் போன்ற பக்கவளைவு ஏற்படுகிறது என்ற பயத்தால் மக்கள் அதனை போட்டுக்கொள்ள அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் கனட நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய மனைவியுடன் சென்று பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அஸ்ட்ராஜெனேகாவின் முதல் டோஸ்ஸை போட்டுள்ளார். இதுவரை கனடாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி 1.1 மில்லியன் மக்களுக்கு போடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே கனடாவின் தலைமை மருத்துவ குழுவினர்கள் அஸ்ட்ராஜெனேகாவை பாதுகாப்பான தடுப்பூசியாக அறிவித்தது.