Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா ஊசி போட்ட தன்னார்வலர்…. எப்படி இறந்து போனார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது

பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது.

இதில் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கெடுத்தனர். இந்நிலையில் பிரேசில் நாட்டில் தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்குபெற்ற தன்னார்வலர் திடீரென மரணம் அடைந்தார். 28 வயதான அவர் பரிசோதனையில் மரணம் அடைந்த பிறகும் தொடர்ந்து பரிசோதனை நடைபெறுகிறது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் தடுப்பு மருந்து பரிசோதனையின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த தன்னார்வலரின் மரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் பிரேசில் செய்தி நாளிதழில் வெளிவந்துள்ளது. மரணமடைந்த தன்னார்வலர் கொரோனாவால் இறந்ததாகவும் அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

Categories

Tech |