ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற 1240 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் போதை பொருள் கடத்தல் என்பது சமீப காலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் ஒரு கோடி மதிப்பிலான போதைப்பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத் எல்லை பகுதியில் உள்ள பொடூப்பால் என்ற பகுதியில் இருந்து மும்பைக்கு கடத்த இருந்த ஆயிரத்து 240 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக டி.சந்தோஷ், வாசுதேவ ரெட்டி, பொன்னம் ராஜேஷ்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு கார் ஒரு சரக்கு வாகனம் மற்றும் ரூபாய் 5000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியாக சேக் யாசின் என்பவர் கருதப்படுகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும் கொரோனா காலகட்டத்தில் இவரது தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் இவ்வாறு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.