Categories
கடலூர் சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடல் : மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து பாடம்…!!

பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இரண்டு அரசு ஆசிரியைகள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்த சமூக இடைவெளியுடன் பாடங்கள் கற்பித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகள் மூலம் கல்வி வீடியோ பாடல்களை ஒளிபரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து பெற்றோர் ஒதுக்கித் தரும் இடத்தில், எழிலரசி என்ற ஆசிரியை பாடம் நடத்தி வருகிறார். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவ மாணவிகள் இரண்டு மணி நேரம் பாடங்கள் பயின்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்கள் போதிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கியது மனதை உறுத்தியதாக  ஆசிரியை எழிலரசி தெரிவித்துள்ளார்.

மாணவர்களை உற்சாகப்படுத்த பிஸ்கட், மிக்சர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியை எழிலரசியை  அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து தமிழ் பாடம் நடத்தி வருகிறார். மரத்தடியில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து  மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆசிரியர் மகாலட்சுமியை கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகமுரி நேரில் வரவழைத்து பொன்னாடை கொடுத்து வாழ்த்தினார். இதேபோல் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட பலரும் ஆசிரியை மகாலட்சுமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் முடப்பட்டாலும் மாணவ மாணவிகளின் நலன் கருதி பாடங்கள் நடத்தும் இந்த அரசு பள்ளி ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது.

Categories

Tech |