இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் இன்று.
சீனாவில் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா படிப்படியாக பல உலக நாடுகளை தாக்கியது. இந்த கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சென்ற வருடம் இதே மாதம் 19ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு அதிக அளவில் கொரோனா பரவிய காரணத்தினால் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தார்.
இதை அடுத்து மாலை நேரத்தில் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி கொரோனாவை விரட்டவும் அழைப்பு விடுத்தார். அன்று தொடங்கிய கொரோனா இன்று வரை நம்மை விடாமல் துரத்தி வருகிறது. சென்ற வருடம் முழுவதும் பல உலக நாடுகள் பொருளாதார பேரழிவை சந்தித்துள்ளது. பலர் வேலையை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடினர். தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் கடுமையான கண்டுபிடிப்புக்குப் பிறகு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.