நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அதன்படி நடிகை பூஜா ஹெக்டே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார்.இதனையடுத்து கஷ்டப்படும் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவரின் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.