நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் இயக்கப்பட்டு வந்தாலும் மக்கள் கொரோனா அச்சத்தால் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என சிஏபிஏ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதி ஆண்டை போலவே இந்த நிதி ஆண்டிலும் 410 கோடி டாலர் இழப்பு ஏற்படும் என முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரால் இரு நிதி ஆண்டிலும் நிறுவனங்களுக்கு ஏற்படும் மொத்த இழப்பானது 800கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.