தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை அளித்து வந்தாலும் மக்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வரும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளதால், அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தாலுகாக்களில் இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதில்லை என்றும் ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.