நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வங்கி EMIதவணையை பட்டி இல்லாமல் ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் சில நிதி நிறுவனங்கள் தவணை தொகையை செலுத்த வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Categories