Categories
உலக செய்திகள்

கொரோனா எங்கு தோன்றியது..? மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆய்வு.. உலக சுகாதார அமைப்பு வெளியீடு..!!

உலக சுகாதார அமைப்பானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  

வௌவாலிலிருந்து கொரோனா வைரஸானது பிற விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா எங்கு ஆரம்பித்தது என்பது தொடர்பான ஆய்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இது குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையானது மத்திய சீனாவில் இருக்கும் உயர்பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து கொரோனா வெளியேறியதா? அல்லது இறக்குமதியான உறைந்த உணவுகளின் வழியாக வூஹான் நகரில் பரவியதா? போன்ற கொரோனாவின் தோற்றம் உருவானது குறித்த பல வரைமுறைகள் தொடர்பில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சிறப்பு குழு மற்றும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதாவது  கொரோனா வைரஸ் மற்றொரு பகுதியிலிருந்து இறக்குமதியானால், சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்காது. ஏனென்றால் அந்த சமயத்தில் பிற பகுதிகளில் கொரோனா கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு, கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் தங்கள் நாட்டிலிருந்து  கொரோனா ஆரம்பிக்கவில்லை என்ற சீனாவின் கூற்றை பொய் என்று நிரூபித்துள்ளது. ஆனாலும் இந்த அறிக்கை பிற வரைமுறைகளை முழுவதுமாக நிராகரிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanam Ghebreyesus தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த அறிக்கையை நான் படித்த போது அனுமானங்கள் முழுவதும் வெளிப்படைத்தனமாக உள்ளது. மேலும் தெளிவான ஆய்வுகள் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |