Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி!…. அதிக இறப்பை சந்தித்த இந்தியா…. வெளியான பலி எண்ணிக்கை….!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதாரஅமைப்பு வெளியிட்ட தகவலின்படி இப்போதுவரை வைரஸ் பாதிப்பால் உலகம் முழுதும் 62,43,000 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இதில் இந்தியாவை பொறுத்தவரையிலும் நாடு முழுதும் இதுவரையிலும் 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே பல நாடுகளில் நிகழ்ந்த கொரோனா இறப்புகள் தொடர்பாக கணிதமாதிரி மதிப்பீட்டின்படி உலகசுகாதார அமைப்பானது ஆய்வுகளை மேற்கொண்டது. இந்தநிலையில் அதன் ஆய்வுமுடிவுகளை உலக சுகாதார அமைப்பானது வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, உலகளவில் கொரோனா பாதிப்பால் அதிக இறப்புகளை சந்தித்தநாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உலகம் முழுதும் கடந்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கொரோனா பாதிப்பால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா குறித்த அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளது. சென்ற 2020 ஜனவரி-2021 டிசம்பர் வரை இந்தியாவில் கொரோனா காரணமாக மொத்தம் 47,29,548 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக 10 லட்சத்து 72 ஆயிரத்து 510 உயிரிழப்புகளுடன் ரஷ்யா 2-வது  இடத்தில் இருக்கிறது. கொரோனா தாக்கம் உயிரிழப்பு கணக்கீட்டில் கணித மாதிரி மதிப்பீட்டை பயன்படுத்தும் உலகசுகாதார அமைப்பின் நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது வந்தது. இதனிடையில் உலக சுகாதார அமைப்பு ஆய்வில் முதல் அடுக்கு நாடுகளிலிருந்து ( அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை ) நேரடியாக பெறப்பட்ட இறப்பு புள்ளி விபரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தியா உள்ளிட்ட 2ஆம் அடுக்கு நாடுகளுக்கு கணித மாதிரி செயல்முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா இந்த வழிமுறையை எதிர்க்கிறது என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த கணக்கீட்டின் வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட தகர்வுகளை கொண்டு உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை இந்தியா நிராகரித்து இருக்கிறது.

Categories

Tech |