Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி….. “இந்தியா உள்ளிட்ட16 நாடுகளுக்கு….. பயண தடை விதித்தது சவுதி அரேபியா”….!!!!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது. அதன்படி சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தின் போது பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை உள்ளிட்டவைக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று விமானம் ரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

பின்னர் சமீப காலமாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த காரணத்தினால் மீண்டும் ரயில், விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி இந்தியா உள்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு தங்களது குடிமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சவுதி அரேபியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை என்றும், சவுதி அரேபியா அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதி செய்துள்ளது.

Categories

Tech |