தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும்.
எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தஞ்சை, காஞ்சி, விருதுநகர், அரியலூர், திருவள்ளூர், விழுப்புரம், தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.