Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. இனி பொது இடங்களில் “மாஸ்க்” கட்டாயம்….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒருநாள் பாதிப்பு 200க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தினசரி பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |