நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராத விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாகப்பட்டது. முக கவசம் அணிய அரசு அறிவுறுத்திய போது மக்கள் அலட்சியமாக செயல்படுவதாக கூறிய அதிகாரிகள் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராத விதிக்க உள்ளதாக கூறியுள்ளனர். எனவே விரைவில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.