நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே நொய்டாவில் ஏப்ரல் 17ம் தேதி வரை இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அத்தியாவசிய தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.