Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஊரடங்கால் திணறும் தொழில் நிறுவனங்கள்….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் உணவுக்காக பெரும் அவதி படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கின் மத்தியிலும் இயங்கி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை, நிதி நெருக்கடி ஆகிய காரணங்களால் திண்டாடுகின்றனர். இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தங்களுக்கு உதவ வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும் எண்ணிக்கையில் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களின் கோரிக்கை மீது அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |