நாட்டில் மீண்டும் கொரானா அதிகரிக்க தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது ” கொரோனா பரவும் நிலையில் பொதுவெளியில் அதிகம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இதையடுத்து பிரதமர் கூறியது போன்று கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, தூய்மை இந்தியாவின் இந்த தூய்மைப் பணித்திட்டம் வெற்றியடைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.