Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பயணிகள் வரத்து குறைவால் மே 25, 26 ஆகிய தேதிகளில் கோவை – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் -கோவை வாராந்திர சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 20 மற்றும் 27 ஆம் தேதி புதுச்சேரி – மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில், மறுமார்க்கத்தில் மங்களூரு – புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் மே 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |