தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இருப்பினும் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகின்றது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைத்து மக்களையும் வலியுறுத்தி வருகின்றது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் சென்னையிலிருந்து வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னையிலிருந்து கொல்கத்தா கவுகாத்தி, பாட்னா, சிலிகுரி, லக்னோ, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.