நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனால் மக்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே ஒரு சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மணிப்பூரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து பள்ளிகளையும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பு மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.